ஓசூர் அருகே டிப்பர் லாரி-பஸ் மோதல்; 20 பேர் காயம்
ஓசூர் அருகே டிப்பர் லாரி, பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
ஓசூர்:
ஓசூர் பக்கமுள்ள கொத்தூர் சர்க்கிள் அருகே நேற்று மாலை, ஒரு தனியார் நிறுவனத்தின் பஸ் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது அந்த வழியாக பெங்களூரு நோக்கி வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரியும், அந்த பஸ்சும் மோதிக்கொண்டன. இதில், பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்தவர்களில் 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற டிப்பர் லாரியை பொதுமக்கள் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து, ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story