அசாமில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
அசாமில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்:
பயணிகளின் வசதிக்காக அசாம் மாநிலம் சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி சில்சார் - கோவை (02516) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 22-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு விசாகப்பட்டிணம், ராஜமுந்திரி, விஜயவாடா, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வெள்ளிக்கிழமை காலை 8.27 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மதியம் 12 மணிக்கு கோவை சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை- சில்சார் (வண்டி எண் 02515) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவையில் இருந்து இரவு 11. 45 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக திங்கட்கிழமை அதிகாலை 00.02 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 00.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டிணம் வழியாக புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு சில்சார் ரெயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெறும் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story