டோஸ்கள் இருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்


டோஸ்கள் இருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:45 AM IST (Updated: 19 Jun 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

டோஸ்கள் இருப்பு இல்லாததால் சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

சேலம்:
டோஸ்கள் இருப்பு இல்லாததால் சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா நோயின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அந்த மையங்களுக்கு 31 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 30 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 24 ஆயிரத்து 800 பேருக்கு கோவிஷீல்டும், 5 ஆயிரத்து 643 பேருக்கு கோவேக்சினும் போடப்பட்டன.
போடும் பணி நிறுத்தம்
இந்த நிலையில் டோஸ்கள் இருப்பு இல்லாததால் நேற்று மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி திடீரென நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தடுப்பூசி போடும் மையங்களில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி போடுவடுதற்காக பல்வேறு இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுமக்கள் பலர் வந்தனர். இதையடுத்து அங்கு தடுப்பூசி போடாடதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பு இல்லாததால் இன்று (நேற்று) தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. விரைவில் தடுப்பூசிகள் சேலம் மாவட்டத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம். அதைத்தொடர்ந்து உடனடியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story