வாணியம்பாடி பகுதியில் பிச்சையெடுப்பது போல் நடித்து கொள்ளையடிக்கும் மர்மநபர்


வாணியம்பாடி பகுதியில் பிச்சையெடுப்பது போல் நடித்து  கொள்ளையடிக்கும் மர்மநபர்
x
தினத்தந்தி 19 Jun 2021 5:20 PM IST (Updated: 19 Jun 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி பகுதியில் பிச்சையெடுப்பது போல் நடித்து யாரும் இல்லாத வீட்டுக்குள் நுழைந்து மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.

வாணியம்பாடி

பணம், நகை கொள்ளை

வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர் பிச்சையெடுப்பதுபோல் நடித்து யாரும் இல்லாத வீட்டுக்குள் நைசாக நுழைந்து பொருட்கள், பணம், நகையை கொள்ளையடித்துச் செல்வதாக வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதேபோல் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் லேப்டாப், செல்போன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அவர், வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை

மேலும் நேற்று வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் சத்யா என்பவரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் பிச்சையெடுப்பது போல் நடித்து, அவரின் வீட்டுக்குள் நுழைந்து ஏ.டி.எம். கார்டுகள், ரூ.20 ஆயிரம், ஒரு பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 

இதுகுறித்த புகாரின்பேரில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை பார்த்து மர்மநபரை அடையாளம் கண்டு பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Next Story