பல்லடத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு அனுமதியின்றி திறக்கப்பட்ட 9 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

பல்லடத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு அனுமதியின்றி திறக்கப்பட்ட 9 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
x
தினத்தந்தி 19 Jun 2021 9:30 PM IST (Updated: 19 Jun 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு அனுமதியின்றி திறக்கப்பட்ட 9 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

பல்லடம்,
பல்லடத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு அனுமதியின்றி திறக்கப்பட்ட 9 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
 பல்லடம் நகராட்சி பகுதியில் ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க வேண்டும் வணிக வளாகங்கள், பெரிய கடைகள் உள்ளிட்ட மற்ற கடைகள் திறக்கக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்துள்ளார்களா? என்பது உள்பட பல்வேறு கொரோனா நடத்தை விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. 
அதன்படி கடை உரிமையாளர்கள் பின்பற்றுகின்றனரா? என நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
9 கடைகளுக்கு ‘சீல்’
அப்போது இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் 3 ஷோரூம்கள், 3  நகை அடகு கடை நிறுவனங்கள், 2 துணிக்கடைகள், மோட்டார் வாகன உதிரி பாகம் விற்கும்  ஒரு கடை ஆகியவை ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்தன. அந்த 9 கடைகளையும் அதிகாரிகள்  பூட்டி ‘சீல்’ வைத்தனர். 
அரசு அனுமதி அளிக்காத கடைகள், நிறுவனங்கள் கொரோனோ நடத்தை விதிமுறைகளை இயங்கினால் அவை அனைத்தும்  பூட்டி ‘சீல்’ வைக்கும் பணி தொடரும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story