மரத்தில் ஏறிய முதியவர் மின்சாரம் பாய்ந்து பலி


மரத்தில் ஏறிய முதியவர் மின்சாரம் பாய்ந்து பலி
x
தினத்தந்தி 19 Jun 2021 10:05 PM IST (Updated: 19 Jun 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே ஆட்டிற்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே ஆட்டிற்கு இலை பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆட்டிற்கு இலை
ராமநாதபுரம் அருகே உள்ள மாடக்கொட்டான் ஊராட்சி ரமலான் நகர் பகுதியை சேர்ந்த ஆதம் என்பவரின் மகன் ஜகாங்கீர்அலி (வயது60). இவர் நேற்று காலை வீட்டின் அருகில் ஆடுகளுக்கு மரக்கிளை பறிப்பதற்காக வேப்ப மரத்தில் ஏறி உள்ளார். 
அங்கு மரத்தில் இருந்தவாறு இலைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை அருகில் இருந்த மின்கம்பியின் மீது உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் மரக்கிளையில் இருந்த ஜகாங்கீர் அலியின் உடல்மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார். 
அவர் மரக்கிளையில் தொங்கியபடி இருந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரியத்தினர் மின்சாரத்தை நிறுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து சென்று மின்சாரம் பாய்ந்து பலியாகி மரக்கிளையில் தொங்கியபடி இருந்த ஜகாங்கீர் அலியின் உடலை மீட்டனர்.
வழக்குப்பதிவு 
இந்த சம்பவம் தொடர்பாக அவரின் மகன் காதர்மைதீன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story