தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம்12 பவுன் சங்கிலி பறிப்பு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாரனோடை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி பார்வதி. சம்பவத்தன்று இவர் அவரது வீட்டின் வாசலில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் பார்வதியின் கழுத்தில் கிடந்த தலா 6 பவுன் எடை கொண்ட 2 சங்கிலிகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பறிபோன தங்க சங்கிலிகளின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து தங்க சங்கிலிகளை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story