வேப்பூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தற்கொலை காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு


வேப்பூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தற்கொலை காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 19 Jun 2021 11:07 PM IST (Updated: 19 Jun 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பூர்,

வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது  மகள் ரம்யா ( வயது 19). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள  தனியார் பொறியியல் கல்லூரியில்,  என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில், இவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. மகளின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

தற்கொலை

இதனால் ரம்யா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு  சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின் பேரில்  வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story