வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூா் மாவட்டத்தில், 3 இடங்களில் வருகிற 26-ந்தேதி ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூா் மாவட்டத்தில், 3 இடங்களில் வருகிற 26-ந்தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2021 11:25 PM IST (Updated: 19 Jun 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி மாவட்டத்தில் 3 இடங்களில் வருகிற 26-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர், 

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் இணைய தளம் மூலம் நடந்தது. கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயிகள் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் பசுமை வளவன் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு க்குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கீரன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராஜசங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி. எம். சேகர், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்ததி, மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், துணை செயலாளர் சரவணன், செல்வக்குமார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு, கான்சாகிப் பாசன விவசாய சங்க செயலாளர் கண்ணன், விவசாய சங்க தலைவர் அத்திப்பட்டு மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்ணா

கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெறவும், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வேளாண் மானியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 7 மாதத்தை நிறைவு செய்கிறது.

இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுனர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது,

ஆர்ப்பாட்டம்

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story