கர்நாடக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்


பெங்களூருவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்த காட்சி.
x
பெங்களூருவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்த காட்சி.
தினத்தந்தி 20 Jun 2021 1:45 AM IST (Updated: 20 Jun 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவுக்கு எதிராக கர்நாடக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு: சசிகலாவுக்கு எதிராக கர்நாடக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆலோசனை கூட்டம்

கர்நாடக மாநில அ.தி.மு.க.  கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு கே.ஆர்.புரத்தில் மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-

பாராட்டு

* அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அ.தி.மு.க.வை செம்மையாக வழிநடத்தி வருவதற்காக கர்நாடக மாநில அ.தி.மு.க. சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களது தலைமையில் தொடர்ந்து பயணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

* நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் வலிமைமிக்க எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வை அங்கீகரித்த தமிழக வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய கர்நாடக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிேறாம்.

* சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வான முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வான கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும், மற்ற பொறுப்புகளுக்கு தேர்வானவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

* அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய முயற்சி செய்து வரும் சசிகலாவை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அவரை எக்காரணம் கொண்டும் கட்சியின் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்படுகிறது.  

* கர்நாடகத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு எம்.எல்.ஏ.க்களும், பெங்களூரு மாநகராட்சியில் 7 கவுன்சிலர்களும் இருந்தனர். ஆனால் இந்த பதவிகளை சீரழித்து சென்ற வா.புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கியதற்கு நன்றியை தெரிவித்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story