போதிய விலை கிடைக்காததால் ஆத்தூரில் சம்பங்கி பூக்களை சாக்கடையில் கொட்டிய விவசாயிகள்


போதிய விலை கிடைக்காததால் ஆத்தூரில் சம்பங்கி பூக்களை சாக்கடையில் கொட்டிய விவசாயிகள்
x
தினத்தந்தி 20 Jun 2021 4:06 AM IST (Updated: 20 Jun 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

சம்பங்கி பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவற்றை சாக்கடையில் கொட்டி உள்ளனர்.

ஆத்தூர்:
சம்பங்கி பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவற்றை சாக்கடையில் கொட்டி உள்ளனர்.
சம்பங்கி பூக்கள்
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மல்லியகரை, ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கல்லாநத்தம், அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, ஆயர்பாடி, ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சம்பங்கி பூக்களை சாகுபடி செய்கிறார்கள். பின்னர் அவற்றை அறுவடை செய்து ஆத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். 
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கிராமப்புறங்களில் இருந்து பஸ்சில் தான் ஆத்தூர் மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் ஆத்தூர் பகுதி விவசாயிகளால் பூக்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் போனது. இதனாலும், போதிய விைல கிடைக்காததாலும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
சாக்கடையில் கொட்டினர்
இதனிடையே பூக்களை விற்க முடியாததால், விவசாயிகள் பூக்களை ஆத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள வசிஷ்ட நதியிலும், சாக்கடைகளிலும் கொட்டு விட்டு செல்கிறார்கள்.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, ஒரு கிலோ சம்பங்கி பூ கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. இந்த விலை பூக்களை பறித்துக்கொண்டு வரும் விவசாயிகளுக்கு வண்டி வாடகை, கூலி ஆட்களுக்கு சம்பளம் போன்றவைக்கு கூட கட்டுப்படியாகவில்லை. இதனால் பல விவசாயிகள் பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். அதனையும் மீறி பறித்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காததால் கீழே கொட்டி செல்கின்றனர் என்றனர்.

Next Story