விபத்தில் லாரி டிரைவர் பலி; மகன் படுகாயம்


விபத்தில் லாரி டிரைவர் பலி; மகன் படுகாயம்
x
தினத்தந்தி 20 Jun 2021 4:38 AM IST (Updated: 20 Jun 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் லாரி டிரைவர் பலி; மகன் படுகாயம்

கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள பெருங்குறிச்சி தேவனாம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 35). லாரி டிரைவர். இவருடைய மனைவி மாதவி (30). இவர்களுக்கு 5 வயதில் அபிஷேக் என்ற மகன் உள்ளான்.
இந்தநிலையில் நேற்று கார்த்திகேயன், மகன் அபிஷேக்குடன் தனது மொபட்டில்  சோழசிராமணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெருங்குறிச்சி அருகே சென்றபோது நிலைதடுமாறிய மொபட் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கீேழ விழுந்த கார்த்திகேயன் மற்றும் சிறுவன் அபிஷேக் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக 2 பேரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தந்தை, மகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். சிறுவன் அபிஷேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story