சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று விடுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதிதேவி முன்னிலையில் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்றுலாத்துறை சார்பில் இங்கு அனைத்து வகை மீன்கள், நண்டு, இறால், கடம்பா போன்றவை கிடைக்கும் வகையில் அசைவ உணவகம் கொண்டு வரும் திட்டம் உள்ளது. கொரோனா தொற்று
முற்றிலும் குறைந்த பிறகு தமிழகத்தில் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டு மாமல்லபுரம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story