மத்திய அரசு அதிகாரியுடன், காந்திராஜன் எம்.எல்.ஏ. ஆலோசனை
வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் மத்திய அரசு அதிகாரியுடன், காந்திராஜன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் சென்றார். அங்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் பொன்.மணிவேலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது வேடசந்தூர் தொகுதியில் வறட்சியான காலகட்டத்தில் விவசாயிகள் பயன் பெறும் திட்டங்கள் பற்றி எம்.எல்.ஏ., அவரிடம் கேட்டறிந்தார். மேலும் அனைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்று எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து அங்குள்ள விவசாய பண்ணையை பார்வையிட்டார்.
ஆலோசனையின்போது வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவிதாபார்த்திபன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள், மத்திய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story