இன்று மின்சாரம் நிறுத்தம்
ராமநாதபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் ராஜசூரியமடை துணை மின் நிலையத்தில் 2-வது பீடரில் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதால் ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு, மீன் மார்க்கெட், சாலைத் தெரு, அக்ரஹாரம் ரோடு, அரண்மனை ரோடு, வடக்குத்தெரு, ராஜா ஸ்கூல், சூரன்கோட்டை, இடையார்வலசை, அல்லிக்கண்மாய் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும், கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள திருஉத்தர கோசமங்கை பீடரில் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாளையரேந்தல், மோர்க்குளம், ஆனைகுடி உப்பளம், நத்தம், குளபதம், மேலமடை, வேளானூர், களரி, கொடிக்குளம், வெங்குளம், கொம்பூதி, எக்ககுடி, திருஉத்தரகோசமங்கை, வெள்ளா, நல்லாங்குடி, பனைக்குளம், அச்சங்குடி, மேலச்சீத்தை மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story