தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு


தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 20 Jun 2021 9:38 PM IST (Updated: 20 Jun 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருேக சொத்து பிரச்சினையில் முன்விரோதம் காரணமாக தந்தை-மகனை அரிவாள் வெட்டினர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம்  அய்யலூர் அருகே உள்ள வேங்கனூர் களத்து வீட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது அண்ணன் வேங்கன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி அவருடைய வீட்டில் இருந்தபோது அங்கு வந்த வேங்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் அவர்கள், பழனிச்சாமி மற்றும் அவரது மகன் பாரதிபிரியன் ஆகிய இருவரையும் கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பழனிச்சாமி, பாரதிபிரியன் ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து பழனிச்சாமியின் மனைவி மல்லிகா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் வேங்கன், அவரது மனைவி சின்னப்பொண்ணு, மகன் குமரேசன் ஆகிய 3 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story