ராஜாபுதுக்குடியில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்த போலீஸ்காரர குடும்பத்துக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆறுதல்
ராஜாபுதுக்குடியில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்த போலீஸ்காரர குடும்பத்துக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆறுதல் கூறினார்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா ராஜாபுதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் அய்யாத்துரை. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 27). இவர் சென்னையில் போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தார். சுப்பிரமணியன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா நோயால் இறந்தார்.
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் செ.ராஜ் ராஜாபுதுக்குடி கிராமத்திற்குச் சென்று சுப்பிரமணியன் தாய், தந்தையிடம் ஆறுதல் கூறினார். பின்னர் அவரது தந்தையிடம் ரூ.10 ஆயிரம் சொந்த நிதியிலிருந்து வழங்கினார். அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செ.செல்வகுமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிபாண்டியன் மற்றும் பலர் உடன் சென்றனர்.இதைத்தொடர்ந்து சன்னதுபுதுக்குடி கிராமத்திற்கு சென்றார். அங்கு பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த சமுத்திரபாண்டியனின் மகன் செல்லத்துரை (21) குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் கயத்தாறு வடக்கு தெரு அங்குசாமி மனைவி லட்சுமி விபத்தில் பலியானதை அறிந்து அங்கு சென்று லட்சுமி கணவர் அங்குசாமிக்கு ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story