தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தடுப்பணையில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தடுப்பணையில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2021 10:18 PM IST (Updated: 20 Jun 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வேளாங்கண்ணி அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தடுப்பணையில் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி:
 மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வேளாங்கண்ணி அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தடுப்பணையில் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

 மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் காவிரி சந்திர நதி ஆற்றில் உள்ள தடுப்பணை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
இதில் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story