நன்னிலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்


நன்னிலம் அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Jun 2021 10:32 PM IST (Updated: 20 Jun 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

நன்னிலம்:-

நன்னிலம் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுக்கடைகள் திறக்கப்படவில்லை

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தளர்வுகளின்படி பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. 
இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட எல்லையையொட்டி உள்ள புதுச்சேரி மாநில பகுதிகளில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி வரப்படுவது அதிகரித்து உள்ளது. இதை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

120 லிட்டர் சாராயம்

அதன்படி நன்னிலம் அருகே உள்ள ஆண்டிபந்தல் பகுதியில் நன்னிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றனர். அந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை செய்தனர். 
இதில் 120 லிட்டர் புதுச்சேரி சாராயம் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குடவாசல் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த பிரியதர்ஷன் (வயது22), குடவாசல் சித்தாடி செட்டி தெருவை சேர்ந்த கோபிநாத் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷன், கோபிநாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தையும், அதை கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story