விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 20 Jun 2021 11:03 PM IST (Updated: 20 Jun 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் இறந்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 41 ஆயிரத்து 504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 321 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 39 ஆயிரத்து 549 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். 

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 128 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. 

2 பெண்கள் பலி

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 55 வயது பெண், விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 76 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 323 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நேற்று ஒரே நாளில் 373 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

Next Story