நச்சலூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு
நச்சலூர் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நச்சலூர்
குடிநீர் குழாயில் உடைப்பு
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் நீர் எடுக்கப்பட்டு ஜீயபுரம்- நெய்தலூர் சாலை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குடிநீருக்காக செல்கிறது. இதில் நெய்தலூரில் உள்ள துணை நீரேற்று நிலையத்தில் தண்ணீர் சேமித்து அதன் பின் மீண்டும் புதுக்கோட்டைக்கு செல்கிறது. இந்தநிலையில் நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூர் வளைவில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால், சின்னப்பனையூர்-காவல்காரன்பட்டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் குழாயில் இருந்து குடிநீர் வீணாவதால் பக்கத்து ஊர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story