ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். 3 பேர் கைது


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற  5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 12:17 AM IST (Updated: 21 Jun 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி

ரேஷன் அரிசி கடத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். 

அப்போது வாணியம்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

இதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த டிரைவர்  பெருமாள் (வயது 39), அவருடன் வந்த சஞ்சீவி (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த 4 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

 இதே போல் உமாராபாத் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதி மக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில் பிச்சைமுத்து (35) என்பவர் வீட்டின் அருகே கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு போலீசார் பிச்சைமுத்து (35) என்பவரை கைது செய்தனர்.

Next Story