நெல்லை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்


நெல்லை மாவட்டத்தில் இதுவரை  2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:53 AM IST (Updated: 21 Jun 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்திற்கு வந்த கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் நெல்லை மருத்துவ கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு தடுப்பூசி போடப்பட்டது.
முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்காக ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்தனர். அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லை மருத்துவ கல்லூரியில் 800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டன.

2 லட்சம் தடுப்பூசி

நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் சுகாதார மையத்தில் நேற்று 250 கோவேக்கின் தடுப்பூசி போடப்பட்டது. மற்ற இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 3 ஆயிரத்து 600 பேருக்கு போடப்பட்டது.
கொரோனா 3-வது அலை எச்சரிக்கையால் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மையங்களுக்கு திரளாக வருகிறார்கள். முன்பு தடுப்பூசி போடாதவர்கள் தற்போது தாமாக முன்வந்து தடுப்பூசி போட ஆர்வம் காட்டுகிறார்கள். 

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 707 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Next Story