கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
புதிதாக 197 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 56 ஆயிரத்து 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 197 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
இவர்களில் சென்னை, கோவை ஆகிய இடங்களில் இருந்து கம்மாபுரம், நல்லூர், பண்ருட்டி வந்த 4 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 2 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 பேருக்கும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 164 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 53 ஆயிரத்து 614 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 299 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். கொரோனாவுக்கு நேற்று மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர்.
இதன் விவரம் வருமாறு:-
கம்மா புரத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் போரூர் தனியார் மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 72 வயது முதியவர், கம்மாபுரத்தை சேர்ந்த 69 வயது மூதாட்டி, பண்ருட்டியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையிலும், நெய்வேலி என்.எல்.சி.யை சேர்ந்த 54 வயது ஆண் சென்னை அரசு மருத்துவமனையிலும் கொரோனா நோய் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 719 ஆக உயர்ந்தது.கொரோனா பாதித்த 1581 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 326 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் 121 கட்டுப்பாட்டுப் பகுதியாக குறைந்தது.
Related Tags :
Next Story