கூலித்தொழிலாளி வெட்டிக்ெகாலை; வாலிபர் கைது
வத்திராயிருப்பு அருகே மனைவியுடன் பேசிய கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே மனைவியுடன் பேசிய கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கூலித் தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சதுரகிரி என்பவரது மகன் சுந்தரமகாலிங்கம் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தாமரை (37) என்பவரது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தாமரை, சுந்தரமகாலிங்கத்திடம் தனது மனைவியுடன் பேசுவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமரை அரிவாளால் சுந்தரமகாலிங்கத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை, உறவினர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரமகா லிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதையறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுந்தரமகாலிங்கத்தின் உடலை வாங்க மறுத்து கூமாப்பட்டி ராமசாமியாபுரம் சாலையில் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்த சுந்தரமகாலிங்கத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் குவிப்பு
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை தாசில்தார் மாதாவிடம் மனுவாக அளித்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரையை கைது செய்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story