மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
மானூர் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
மானூர்:
மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தை சேர்ந்தவர் அண்ணாவி மனைவி திரேசா (வயது 72). தனியாக வசித்து வரும் இவர் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நபர், தான் மின்வாரியத்தில் இருந்து மீட்டர் ரீடிங் எடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் வந்துள்ளார். திடீரென திரேசாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story