அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை


அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2021 1:36 AM IST (Updated: 21 Jun 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

குலசேகரம்:
குலசேகரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கொரோனா சிகிச்சை பிரிவு
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையின்கீழ் குலசேகரம் அரசு மருத்துவமனையில் 75 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிசிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிகிச்சை பிரிவை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் முதல் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தற்போது கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் சப்ளை 2 மெட்ரிக் டன் ஆக இருந்தது தற்போது 6 மெட்ரிக் டன் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதோடு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறைக்கப்பட்டு உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள்
அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. குலசேகரம் அரசு மருத்துவமனையில் 85 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் 75 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய கொரோனா சிகிச்சை பிரிவு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
இங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளை கவனிப்பதற்கு 10 டாக்டர்கள்,  10 சுகாதார செவிலியர்கள் மற்றும் 10 சுகாதாரப்பணியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் 13 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. குலசேகரம் அரசு மருத்துவமனையினை தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மரக்கன்றுகள்
தொடர்ந்து குலசேகரம் டி.வி.எஸ். அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை வளாகத்தில் புதர் மண்டிய பகுதிகளை சரிசெய்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினை அமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவபணிகள்) பிரகலாதன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், கொரோனா கண்காணிப்பு அலுவலர் ரெனிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story