மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது + "||" + Worker arrested

பெண்ணுக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் மனைவி பொன்னுத்தாய் (வயது 43). இவரது மகன் முனீஸ்வரன், கோவை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே நெடுங்குளத்தில் உள்ள ஒரு தெருவில் சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. தனது வீட்டு வழியாக அந்த சாலையில் நடந்து செல்வதற்கு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான பவுன்ராஜ் என்ற ஆறுமுகம் (50) என்பவர் அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சம்பவத்தன்று பொன்னுத்தாய், முனீஸ்வரன் ஆகியோர் பவுன்ராஜ் வீட்டு வழியாக சாலையில் சென்றனர். அப்போது பவுன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து பொன்னுத்தாயை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக பொன்னுத்தாய் அளித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
2. எனக்கு கொலை மிரட்டல் வருகிறது: சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர்
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியானது.
3. வாலிபரை மிரட்டியவர் கைது
நெல்லையில் வாலிபரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
4. கம்பியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு
கம்பியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
நச்சலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.