திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனரை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு


திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனரை தாக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jun 2021 11:14 AM GMT (Updated: 2021-06-21T16:44:05+05:30)

திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை நந்திமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 25). இவர் திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தற்காலிக மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதன், கொரோனா தடுப்பூசி மையத்திலிருந்து தடுப்பூசி எடுத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை திடீரென வழிமறித்து அவரை அடித்து உதைத்து அவர் கொண்டுவந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி பெட்டியை திறந்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மதன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தற்காலிக மருந்தாளுனரை தாக்கி பணி செய்ய விடாமல் மிரட்டிய மர்ம நபர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story