புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு


புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 8:27 PM IST (Updated: 21 Jun 2021 8:27 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவை,

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு  வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.புதுவையில்  தற்போதைய கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திரைப்படம் மற்றும் சின்னத்திரைக்கான படப்பிடிப்பை 100 பேரைக் கொண்டு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.  மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும்.  பூங்காக்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம். 

அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.  பொதுப் போக்குவரத்துக்கு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கு மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை


Next Story