இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:31 PM IST (Updated: 21 Jun 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் பகுதியில் இன்று மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பகுதியில் இன்று மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு
ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள மின் தடை பற்றிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் அவசரகால பராமரிப்பு பணிகளுக்காக மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.
 அதன்படி ராமநாதபுரம் ராஜசூரியமடை துணை மின் நிலையத்தில் உள்ள 3-வது பீடரில் அவசரகால பராமரிப்பு பணி நடை பெறுவதால் ராமநாதபுரம்-மதுரை ரோட்டில் உள்ள பயோனியர் மருத்துவமனை, ஏ.ஆர்.மருத்துவமனை, பெரியார் நகர், மதுரை ரோடு, தெய்வேந்திர நகர், அரசு போக்குவரத்து கழக பணிமனை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, கருங்குளம், எட்டிவயல், முகமதியாபுரம், செய்யாலூர் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
பட்டிணம்காத்தான்
மேலும் பட்டிணம் ‌காத்தான் துணை மின் நிலையத்தில் உள்ள ஓம் சக்தி நகர் பீடரில் அவசரகால பராமரிப்பு பணி நடை பெறுவதால் விவேகானந்தா பள்ளி, நியூ ஹவுசிங் போர்டு, அம்மா பூங்கா, அரண்மனைசாலை, ஜி.எம்.மஹால், ஓம்சக்தி நகர், வசந்த நகர், இந்திரா நகர், தாயுமானசாமி கோவில் தெரு, சேதுபதி நகர் வடக்கு, முகமது சதக் தஸ்தகீர் பள்ளி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சிவன் கோவில் தெரு, செட்டிய தெரு மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மண்டபம்
இதேபோல மண்டபம் துணை மின் நிலையத்தில் உள்ள மண்டபம் பீடரில் அவசரகால பராமரிப்பு பணி நடை பெறுவதால் மண்டபம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேலும் ஆர்.காவனூர் துணை மின் நிலையத்தில் உள்ள சித்தார் கோட்டை பீடரில் அவசரகால பராமரிப்புபணி நடை பெறுவதால் தொருவளூர், பாப்பாகுடி, கவரங்குளம், வன்னிவயல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவாடானை
திருவாடானை துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாடானை நகர் பகுதி, பாரதிநகர், சமத்துவபுரம், கல்லூர், தோட்டாமங்கலம், பண்ணவயல், திருவிடைமிதியூர், அழகமடை, கருப்பூர் காரங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story