தென்னை நார் தொழிற்சாலையில் தீ


தென்னை நார் தொழிற்சாலையில் தீ
x
தினத்தந்தி 21 Jun 2021 9:19 PM IST (Updated: 21 Jun 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீப்பிடித்தது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முனிக்குமார். இவருக்கு, பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம்-குட்டிக்கரடு ரோட்டில் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. 

இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. 

இதுகுறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விவேகானந்தன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். 



எனினும், தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த  தென்னை நார்கள் தீயில் எரிந்து நாசமாயின.


Next Story