மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Jun 2021 10:52 PM IST (Updated: 21 Jun 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்

கீரமங்கலம், ஜூன்.22-
கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் மாலையில் பால் வாங்கி கொண்டு சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, நகரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குணசேகரன் மீது மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து  குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story