புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

ஆவூர், ஜூன்.22-
விராலிமலை அருகே புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை
விராலிமலை அருகே ஆலங்குடியில் கடந்த 19-ந்தேதி மாலையில் வெம்மணி ஊராட்சி நரியப்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் அய்யர் என்ற கருப்பையா (வயது 25) மற்றும் சிலர் அங்கு உள்ள டீக்கடையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை தட்டிகேட்ட அதே ஊரை சேர்ந்த வினோத்குமார் (30), அவரது அண்ணன் பூவிழியரசன் ஆகிய இருவரையும் கருப்பையா உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து கட்டையால் தலையில் பலமாக தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 2 பேர் கைது
இது குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரியப்பட்டியை சேர்ந்த கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பாரதி உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நரியப்பட்டி துரையன் மகன் திவாகர் (25), மாரிமுத்து மகன் சிவகுமார் (25) ஆகியோரை நேற்று மண்டையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story