கடலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 320 பேர் கைது போலீசார் நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 320 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட குட்கா, சாராயம், சூதாடும் நபர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.
அதன்படி லாட்டரி சீட்டு விற்றதாக மஞ்சக்குப்பம் செந்தாமரை நகர் ஆறுமுகம் (வயது50). காட்டுமன்னார்கோவில் இந்திரா நகரைச் சேர்ந்த மயில் என்கிற ராகுல் (28), திட்டக்குடி மது பாலாஜி (29), கடலூர் முதுநகர் அண்ணா ராஜ் (45) ஆகிய 4 பேரையும், மணல் கடத்தியதாக இரண்டாயிரம் விளாகம் அங்காளன் (40),
சின்ன தானகுப்பம் சிவசுப்பிரமணியன் (53), உறையூர் அன்பரசன் (30), ஆகிய 3 பேரையும், கஞ்சா வைத்திருந்ததாக விருத்தாசலம் செல்வராஜ் நகர் சங்கர் (43), பண்ருட்டி அம்பேத்கர் நகர் சூர்யா (24), திட்டக்குடி கோழியூர் ஆறுமுகம், மந்தாரக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் தெரு பெங்களூர் மணி என்கிற மணிகண்டன் (28) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குட்கா
மேலும் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்ததாக திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் தெரு முனியாண்டி (60), சிதம்பரம் பொன்னம்பலம் நகர் பழனிவேல் (60), மங்களூர் குளத்துமேடு கோபிநாத் (32), கடலூர் ரெயில்வே காலனி பாக்கியவதி (60), சிதம்பரம் வ.உ.சி.தெரு மணி (55), லால்கான் தெரு முகமது ஆரிப் (44) ஆகிய 4 பேரையும், சூதாடிய 15 பேரையும், சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியதாக 288 வழக்குகள் பதிவு செய்து, 288 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 1283 லிட்டர் சாராயத்தையும், 1283 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story