போக்குவரத்து விதிகளை மீறிய 108 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிகளை மீறிய 108 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Jun 2021 12:05 AM IST (Updated: 22 Jun 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறிய 108 பேர் மீது வழக்கு

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் சிப்காட் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனை சாவடி, பள்ளேரி மற்றும் சிப்காட் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது ஹல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் வாகனம் ஓட்டியது, வாகனங்களை இன்சூரன்சு செய்யாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 108 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
மேலும் முககவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story