கோவிலில் நகை திருடிய 3 பேர் கைது


கோவிலில் நகை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 12:07 AM IST (Updated: 22 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே கோவிலில் நகை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் இரும்பு கேட்டை தூக்கி வைத்து விட்டு உள்ளே சென்று அம்மனின் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தங்க கண்மலர்களை திருடிச் சென்று விட்டனர். காலையில் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இருமதி துரைகருணாநிதி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இது தொடர்பாக அம்மச்சி ஊரணியை சேர்ந்த பூமி (வயது37), ராஜ்குமார் (28), ஓரியூர் அருகே அரசத்தூரை சேர்ந்த ரத்தினவேல் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க கண்மலர்கள் மீட்கப்பட்டன.


Next Story