திமுக பிரமுகர் வீட்டில் பீர் பாட்டில்கள் வீச்சு


திமுக பிரமுகர் வீட்டில் பீர் பாட்டில்கள் வீச்சு
x
தினத்தந்தி 21 Jun 2021 6:51 PM GMT (Updated: 2021-06-22T00:21:41+05:30)

சூலூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பீர் பாட்டில்கள் வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கருமத்தம்பட்டி

சூலூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பீர் பாட்டில்கள் வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

தி.மு.க. பிரமுகர்

கோவையை அடுத்த சூலூர் 13-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் லிங்கம் (வயது 50). கட்டிட காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்த இவர் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்து கட்சி பணியாற்றி வந்தாக தெரிகிறது.

இந்த நிலையில் அதிகாலை 1½ மணியளவில் லிங்கம் வீட்டின் மெயின் கதவு அருகே டமார் என்ற சத்தம் கேட்டது. உடனே அவர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது, அங்கிருந்து மர்ம நபர் கள் தப்பிச்சென்றனர். 

பீர் பாட்டில்கள் வீச்சு 

அவருடைய வீட்டின் முன்பு 3 பீர் பாட்டில்கள் வீசப்பட்டு அவை உடைந்து கிடந்தன. உடனே அவர் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததுடன், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தி.மு.க. பிரமுகர் வீட்டின் முன்பு  பீர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story