நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகை


நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 22 Jun 2021 12:22 AM IST (Updated: 22 Jun 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

சீட்டுநடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் குழுவினர், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

திருப்பத்தூர்-

முற்றுகையிட்டு மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பாப்பா மற்றும் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

 சிவன் மகளிர் குழு தலைவியாக நான் உள்ளேன். எங்கள் குழு பெண்களிடம் ஆம்பூர் அண்ணா நகரைச் சேர்ந்த இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளரான புகழேந்தி தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி மாதம் ரூ.550 வீதம் 26 நபர்களிடம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 600 வசூல் செய்தார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும் 

அதன்படி தீபாவளி அன்று தர வேண்டிய பரிசுப்பொருட்கள் தராமல் இழுத்தடித்து ஏமாற்றினார். பலமுறை புகார் அளித்து ரூ.84 ஆயிரத்து 800-ஐ மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 16 நபர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு மீதி உள்ளவர்களுக்கு தரவேண்டிய பணம் ரூ.87 ஆயிரம் தரவில்லை.

ஏழ்மை நிலையிலுள்ள எங்களுக்கு தரவேண்டிய பணத்தை பெற்றுத்தந்து, அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில்கூறி உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story