திருப்பத்தூர்,
சிங்கம்புணரி பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு மணல் கடத்தி வருவதாக நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்பத்தூர் சிங்கம்புணரி சாலையில் அரசு உணவு பொருட்கள் கிடங்கு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேவுகவீரையா வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி அதில் இருந்த மூடைகளை பிரித்து பார்த்த போது மணல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த திருப்பத்தூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜரத்தினம் (51), சோழம்பட்டியைச்சேர்ந்த தியாகராஜன் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். சரக்கு வாகனத்தில் இருந்த 54 சாக்கு மூடைகளில் இருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது.