கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 Jun 2021 12:30 AM IST (Updated: 22 Jun 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கரூர்
கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இதில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 100 பேருக்கும், வக்கீல்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 230 பேர் என மொத்தம் 330 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் சமூகநலத்துறை மற்றும் கிராமியம் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த முகாமில், 60 திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் மோகன்ராம், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட சமூகநல அலுவலர் ரவிபாலா, கரூர் வட்டாட்சியர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story