வாங்கல் குப்புச்சிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட தானியக்கிடங்கு திறக்கப்படுமா?


வாங்கல் குப்புச்சிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட தானியக்கிடங்கு திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 21 Jun 2021 7:04 PM GMT (Updated: 21 Jun 2021 7:04 PM GMT)

வாங்கல் குப்புச்சிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட தானியக்கிடங்கு திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்
தானியக்கிடங்கு
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், வாங்கல், நெரூர் ஆகியவை காவிரி கரையோர பகுதிகளாகும். இதனால் இப்பகுதியில் எப்போதும் விவசாயம் செழிப்பாக இருக்கும். இதனால் அப்பகுதியில் விவசாயிகள் வாழை, கரும்பு, நெல், சோளம், கம்பு, சூரியகாந்தி உள்ளிட்டவற்றை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில் இங்கு விளைவிக்கப்படும் தானியங்களை சேமித்து வைக்க தானியக் கிடங்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கு கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் புதிதாக தானியக்கிடங்கு அமைக்க ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 
எதிர்பார்ப்பு
இருப்பினும் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே புதிதாக கட்டப்பட்டுள்ள தானியக் கிடங்கு எப்போது திறக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விடப்படும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story