நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா: சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.
7-ம் திருவிழாவான நேற்று காலையில் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story