மொபட் மீது கார் மோதல்; பெண் பலி


மொபட் மீது கார் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 21 Jun 2021 7:37 PM GMT (Updated: 2021-06-22T01:07:08+05:30)

மொபட் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.

காளையார்கோவில்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் இஸ்மாயில் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 35). இவருடைய மனைவி அருணா தேவி (29). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ஆர்.எஸ்.மங்கலத்திலிருந்து காளையார்கோவில் நோக்கி மொபட்டில் வந்துகொண்டிருந்தார். அப்போது வளையம்பட்டி அருகே வந்த போது எதிரே வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அருணாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த இளையான்குடியைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவரது மகன் கிறிஸ்துராஜா(32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story