போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 1:13 AM IST (Updated: 22 Jun 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்:
ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள ருக்குமணியம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை மகன் பாலமுருகன் (வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்தனராம். திருமண ஆசை கூறி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இந்நிலையில் சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்துகொள்வதற்கு பாலமுருகன் மறுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 



Next Story