கும்பகோணத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த ‘மர்ம கார்’ போலீசார் விசாரணை

கும்பகோணத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த ‘மர்ம கார்’ போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jun 2021 1:41 AM IST (Updated: 22 Jun 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் சந்தேகத்திற்கு இடமாக பல மாதங்களாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்த மர்ம கார் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில் சந்தேகத்திற்கு இடமாக பல மாதங்களாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்த மர்ம கார் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மர்ம கார்

தஞ்சை மாவட்டம் ‌கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகே திருமஞ்சன வீதி, குட்டியான் தெரு சாலைகள் சந்திக்கும் பகுதியில் கார் ஒன்று கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 
இந்த கார் யாருடையது? இந்த பகுதியில் எப்போது கொண்டு வந்து நிறுத்தினார்கள்? என்பது மர்மமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. ‌இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

போலீசார் விசாரணை

தகவலின்பேரில் ‌சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் அந்த கார் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் இந்த கார் யாருடையது? பல மாதங்களாக இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததற்கான காரணம் என்ன? காரில் தீப்பிடித்தது எப்படி? என்பது பற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story