நெல்லையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய மக்கள் கூட்டம்
நெல்லையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனா 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிகளவு முன்வந்துள்ளனர். இதனால் தடுப்பூசி மையங்களுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகரில் நேற்று பா.ஜனதா மற்றும் நலச்சங்கம் சார்பில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. சங்க துணைத்தலைவர் ஜூபிடர் ராமசாமி தலைமையில் பணிகள் நடைபெற்றது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டது.
இதேபோல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களிலும் நேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. அந்த முகாம்களிலும் மக்கள் கூட்டமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story