2-வது திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செங்கோடு அருகே 2-வது திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு அருகே கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகள் சந்தியா (வயது 20). இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவரை பிரிந்து சந்தியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சந்தியாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2-வது திருமணத்தில் சந்தியா உடன்பாடு இல்லாமல் இருந்தாராம்.
இதனால் விரக்தி அடைந்து மனமுடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story