கொரோனாவுக்கு 511 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
511 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 517 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 511 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 130 பேர், நங்கவள்ளியில் 38 பேர், ஓமலூரில் 32 பேர், எடப்பாடியில் 28 பேர், தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 26 பேர், கொளத்தூரில் 23 பேர், மேச்சேரியில் 22 பேர், சங்ககிரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 17 பேர், மேட்டூரில் 15 பேர், சேலம் ஒன்றியத்தில் 14 பேர், வீரபாண்டியில் 11 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 10 பேர், பனமரத்துப்பட்டியில் 9 பேர், காடையாம்பட்டியில் 8 பேர், கெங்கவல்லி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், மகுடஞ்சாவடி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், ஏற்காட்டில் 3 பேர், நரசிங்கபுரத்தில் 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
4,036 பேருக்கு சிகிச்சை
சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சியில் இருந்து வந்த தலா 7 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 4 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளன. மேலும் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 858 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 4 ஆயிரத்து 36 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 பேர் பலி
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story