திருவொற்றியூர் மண்டலத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று திருவொற்றியூர் மண்டலத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு 7-ல் உள்ள சாத்தாங்காடு ஏரியை பார்வையிட்ட அவர், அங்கு புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளிடம் கூறினார்.அதேபோல் கார்கில் நகர் பம்ப் அறை, குப்பை தரம் பிரித்தல் கூடம், மாட்டுமந்தையில் நடைபெற்ற தீவிர தூய்மைபணி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளம், எண்ணூர் முகத்துவாரம் போன்ற இடங்களை பார்வையிட்டு, மண்டல நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை கமிஷனர் சினேகா, மண்டல செயற்பொறியாளர் பால்தங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story